Breaking News

கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை பற்றி கூறும் கோத்தபாய

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவை பற்றி தனக்கு தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அந்த விடயம் அரசியல் ரீதியான செயற்பாடு எனவும் தான் அதில் சம்பந்தப்படவில்லை என்பதால், எதுவும் தெரியவில்லை எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நேற்று கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய, அதனை ஊடகவியலாளர்கள் மூலம் அறிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.