Breaking News

அனைவரையும் அணி திரளுமாறு மஹிந்த கோரிக்கை

முற்போக்கு சக்திகள் அனைத்தையும் அணி திரளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.


எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஜன சட்டன பாத யாத்திரை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நேசிக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

பாத யாத்திரைக்கு இறை ஆசி வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.