Breaking News

மலசலகூடத்திற்கும் மகிந்தவின் பெயர்..!!



மலசலகூடம் ஒன்று அமைத்தாலும் அதற்கு தனது பெயரை இட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரச்சாரம் தேடியதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த சிறிய இலங்கைத் தீவை நாம் பொறுப்பேற்றுக் கொண்டதனை விடவும் பாரியளவில் அபிவிருத்தி செய்துள்ளோம். மஹிந்த ராஜபக்ச மலசலகூடம் ஒன்றை அமைத்தாலும் பெயரையிட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்.

எனினும் நாம் நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் அபிவிருத்தி செய்து வருகின்றோம். இதுபற்றிய பிரச்சாரங்களை நாம் செய்வதில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக கோடிக் கணக்கில் செலவிட்டாலும் வருமானம் கிடைக்கவில்லை.

சூரியவௌ மைதானத்தை அமைப்பதற்காக துறைமுக அதிகாரசபை 4500 கோடி ரூபா செலவிட்டுள்ளது. எனினும் மைதானத்தை அமைப்பதற்கு 852 கோடி ரூபாவே செலவாகியுள்ளது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.