காணாமல் போனோர் அலுவலகம் ஆபத்தானது!
காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள புதிய அலுவலகமானது ஆபத்தான ஒன்றென தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காணாமல் போனோர் அலுவலகமானது ஏனைய திணைக்களங்களை விட இதற்கு பல அச்சுறுத்தும் அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரும்,சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவரையாளருமான மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஆணைக்குழுவும் குறித்த சங்கத்தினால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இந்தியாவுடன் அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவானது சுயாதீனமான ஒன்று அல்லவென்றும் இந்த சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு மூலம் இறுதியில் இந்தியாவுக்கு சார்பாகவே முடிவுகள் கொண்டவரப்படும் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.








