மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை - THAMILKINGDOM மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை - THAMILKINGDOM

 • Latest News

  மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.


  சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவது குறித்து, முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

  கூட்டு எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top