Breaking News

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாதயாத்திரையாம்: கொக்கரிக்கிறார் மகிந்த

கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பாதயாத்திரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாத யாத்திரை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.


கண்டியிலிருந்து கொழும்பு வரையான கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச,

இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே போன்று பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்கா ஒப்பந்தம் போன்ற மக்கள் விரோத செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் இந்தப் பாதை யாத்திரை ஊடாக வீதிக்கு இறங்கிப் போராடுகின்றார்கள். அரசாங்கம் இதனை உணர்ந்து கொண்டு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

ஆனால் அவை நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.