Breaking News

‘இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்து’ : யாழில் கையெழுத்து வேட்டை

 

இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சியினரின் ஏற்பாட்டில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, யுத்தத்தின் போது இடம்பெற்ற சேதங்களிற்கு இழப்பீடு வழங்கு என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து பெறும் போராட்டத்தில் அதிகளவான மக்கள் கையொப்பங்களை இட்டு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.