சுவாதி கொலை வழக்கில் புதினமான தகவல்
படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதியதும், புதினமானதுமான செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த மாதம் 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ராம்குமார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் குறித்து தற்போது செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுவாதிக்கும், ராம்குமாருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. சுவாதியும், ராம்குமாரும் பேஸ்புக் மூலமாகவே நண்பர்களாகியுள்ளனர். அதன் பின்னரே சுவாதியின் வீட்டிற்கு அருகில் ராம்குமார் தங்கியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸார், ”சுவாதியும், சூர்யபிரகாஷ் என்பவரும் பேஸ்புக்கில் நண்பர்கள்.
அத்துடன், சூர்யபிரகாசும், ராம்குமாரும் பேஸ்புக் நண்பர்கள். இந்நிலையில் சூர்யபிரகாஷ் மூலமாகவே ராம்குமாருக்கு சுவாதியின் நட்பு கிடைத்துள்ளது.
இதேவேளை, சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை பொலிஸார் ஒருவார காலம் தேடிய நிலையிலும் சூர்யபிரகாஷ் அமைதியாக இருந்துள்ளார்.
அத்துடன், சுவாதியின் மற்றொரு நண்பரான முகமது பிலால் சித்திக், என்பவர் பொலிஸாருக்கு பல முக்கிய தகவல்களைத் வழங்கியிருந்தார்.
எனினும், சுவாதியின் பேஸ்புக் நண்பரான சூர்யபிரகாஷ் இதன் போது எந்தத் தகவலையும் எங்களுக்கு வழங்கவில்லை.
எனவே, அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக” பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








