காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பா டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த இடைக்கால அறிக்கையானது எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காணாமற்போனோர் தொடர்பில் கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையாத போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளோம்.
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எதிர்காலத்தில் அலுவலகமொன்றை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6000 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.








