நல்லாட்சியை மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் மஹிந்த
நல்லாட்சி அரசாங்கத்தால், சாதாரண மக்கள் அயலவர்களிடம் வாங்கும் கடன்களுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘என் மீது சேரு பூசும் நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும்.
தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை கடும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு உரிய தீர்வினை காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதற்கு மாறாக தன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
எனவே என்மீத போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டு மக்களின் சுமையை குறைத்து உரிய முறையில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும். தற்போது வற் வரி அதிகரிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாயினும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாகவும் சீரற்ற பொருளாதார கொள்கையினாலும் அன்றாடம் சாதாரண வீடுகளில் நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியேற்படும்’ என தெரிவித்துள்ளார்.








