யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி - THAMILKINGDOM யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி - THAMILKINGDOM

 • Latest News

  யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி  பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்ப டுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்து, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள பொறியியற்பீட வளாகத்தில் இடம்பெற்றது.

  அரசியல் தலையீடுகளற்ற புதிய நியமனங்கள் வேண்டும், மொழிக் கொடுப்பனவு வேண்டும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், மாதாந்த இழப்பீட்டு தொகையை சமமாக வழங்கு, ஓய்வூதியத் திட்டத்தில் பாராபட்சம் ஏன்? சகல பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும், சொத்துக்கடன் தொகையை அதிகரி போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

  இந்த நிலையில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியில் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top