Breaking News

வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!



வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ அமைப்பின் உறுப்பினரான இவர், அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.