நிழல் அமைச்சரவை மூலம் எமது பேராசையே வெளிப்பப்படும்
நிழல் அமைச்சரவை மூலம் தாம் அதிகாரத்திற்கு பேராசை கொள்வதாக மக்கள் நினைக்ககூடும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்;
தம்மிடம் குறைப்பாடுகள் இருந்தமையினாலேயே மக்கள் தம்மை தோல்வி அடையச் செய்தார்கள்.தொடர்ந்தும் தாம் அந்த குறைப்பாடுகளுடன் செயற்பட்டால் தம்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.








