நாட்டில் 3 ஆயிரம் பிள்ளைகளுக்கு பாடசாலை வசதி இல்லை- ஜோசப் ஸ்டாலின்
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் காத்திரமான முறைமை யொன்று இல்லாமையினால் சிக்கல் நிலைமை காணப்படுவதையே, பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் மீகஹதென்ன ஆரம்ப பாடசாலை சம்பவம் எடுத்துக் காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்க முயற்சித்த பெற்றோர்களை கைது செய்வது தவறான ஒன்றாகும். தெவரப்பெரும செய்த நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார், பெற்றோரை மாத்திரம் கைது செய்ததை கடுமையாக கண்டிக்கின்றோம்.
இலங்கையில் பாடசாலை இன்றி 3 ஆயிரம் பிள்ளைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








