Breaking News

“நிழல்” அமைச்சரவையில் பசில் மற்றும் சிறுபான்மைக்கு ஏன் இடமில்லை?- விளக்கம்



கூட்டு எதிர்க்கட்சி நேற்று நிறுவிய “நிழல்” அமைச்சரவையில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த எவருமே உள்ளக்கப்படவில்லை என சில இணையங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேலும் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்த நிழல் அமைச்சரவையில் எவ்விதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்திகள் மூலம் சிறுபான்மையினரை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து மேலும் தூரமாக்குவதே நோக்கமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும் இவ்வாறான யதார்த்தமற்ற செய்திகளை பரப்புவதன் மூலம் தமது இலக்குகளை அடைய நினைப்பது ஊடக தர்மத்திற்கு முரணான செயற்பாடாகவே கணிக்கப்படுகிறது.

உண்மையிலேயே கூட்டு எதிர்க்கட்சியில் அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிறுபான்மை உறுப்பினர்களாவது உள்ளார்களா என்ற விடயம் கூட ஆராயப்படாமல் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுப் பொறுப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியில் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லாத நிலையில், சிறுபான்மை உறுப்பினர்களுக்கு எவ்வாறு பதவிகளை வழங்க முடியும்?

அதேபோன்று மஹிந்த ஆதரவு கூட்டு எதிக்கட்சி சிறுபான்மையினரின் பலத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே அதில் சிறுபான்மையினருக்கான உரிமைகளை எதிர்பார்ப்பது வேடிக்கையான விடயமும் கூட.

அதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதைய பாராளுமன்றில் ஒரு உறுப்பினர் அல்ல. அதன் காரணத்தினாலேயே குறித்த நிழல் அமைச்சரவையில் அவருக்கும் எவ்விதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.