இந்திய துரித அம்பியூலன்ஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
இந்திய – ஸ்ரீலங்கா புரிந்துணர்வு அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்திய துரித அம்பியூலன்ஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு – காலி முகத்திடலில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இந்திய துரித அம்பியூலன்ஸ் சேவை ஊடாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 470 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த துரித அம்பியூலன்ஸ் சேவையில் இணைவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசேட பயிற்சியும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் சேவைகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.