Breaking News

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் தொலைக்காட்சியில் உணவு சமைக்கிறார்



அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை அரச தொலைக்கா ட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், நேற்று(13) ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நுக செவன” என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணரான பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலில், நிஷா பிஸ்வால், இலங்கை உணவு ஒன்றை சமைத்துக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.