Breaking News

யாழ். பல்கலை மோதல்: ஏன் இன்னும் எவரும் கைதாக வில்லை- சம்பிக்க



களனிப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்த மாணவர்களை சிறையில் அடைக்க முடியுமாயின், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சட்டம் இன்னும் ஏன் செயற்படவில்லையென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிலுள்ள சட்டம் சகலருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் சட்டத்தின் முன்கொண்டுவரப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுள்ளார்.