ஒகஸ்ட் மாதம் மீள்குடியேற்ற அரசு திட்டம் : தி ஹிந்து
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 31 முகாம்களிலுள்ள 971 பேரை மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீடுகளின் நிர்மாண பணிகள் 6 மாதகாலத்திற்குள் நிறைவடையவுள்ள நிலையில் எஞ்சிய 767 குடும்பங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.