விக்னேஸ்வரனை சந்திக்கிறார் மாவை!
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பு என்பது குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதற்கமைய தாண்டிக்குளம் மற்றும் ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் நேற்று சனிக் கிழமை காலைபார்வையிட்டனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சந்திப்பைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வாறாயினும் வடக்கிற்கான பொருதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பு என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வருகின்றன.
பொருதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பு என்பது குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகணசபை உறுப்பிர்கள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் அலுவலகத்தில் இருதடவைகள் கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.








