மேலும் இரண்டு ராஜபக்ஷக்கள் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட சிலர் இன்று பார்வையிடச் சென்றிருந்தனர்.
நாமலை பார்வையிடச் சென்று திரும்பிய முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு ராஜபக்ஷக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக யார்? யார்? இந்த இருவரும் என்பது பற்றிய விரபங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தம்மையும் அரசாங்கம் கைது செய்யக் கூடுமென மஹிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரொக்கட் செய்தமை அல்லது பாடல் பாடியமைக்காக தாம் கைது செய்யப்படலாம் எனவும், இதுவா நல்லாட்சி எனவும் ரோஹித்த கேள்வி எழுப்பியுள்ளார்.








