Breaking News

இலங்கையை குட்டி சீனாவாக மாற்ற முனைந்தார் மகிந்த

இலங்கையை குட்டி சீனாவாக மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று அமைச்சர் கபீர் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் கபீர் காசிம் “மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, இலங்கையை குட்டி சீனாவாக மாற்ற முயன்றது.

சீனாவுடன் எந்த இருதரப்பு உடன்பாடுகளையும் செய்து கொள்ளாமலேயே, சீனாவில் இருந்து தொழிலாளர்களையும், பல்வேறு பொருட்களையும் மகிந்த ராஜபக்ச கொண்டு வந்தார்” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.