தனக்கு ஒத்துழைப்பு வழங்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களை காட்டிக்கொடுத்த றிஷாட்!
வவுனியாவில் பொருளாதார மையம் ஒன்றை பல கோடி ரூபா செலவில் அமைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு வடமாகாண சபை முட்டுக்கட்டை போடுகின்றது. வவுனியாவுக்கு வந்த பொருளாதார மையத்தை ஓமந்தைக்கு கொண்டு செல்வதற்காக இவர்கள் பாடாய்ப்பட்டுத்திரிகின்றனர்.
நிபுணர்களைக் கொண்டு வவுனியா தாண்டிக்குளம் இந்த மையத்துக்கு பொருத்தமில்லை என அறிக்கை சமர்ப்பிக்கின்றன. தங்கள் கட்சிக்குள்ளேயே வாக்களிப்பை நடாத்தி மக்களை திசை திருப்பிகின்றனர். பொருளாதார மையம் தாண்டிக்குளத்தில் தான் அமைய வேண்டும் என்பதில் வன்னி மாவட்ட எம்.பிக்களும் வடமாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னியைச் சேர்ந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் இந்த பொருளாதார மையத்தின் ஆணி வேர்களான விவசாயிகளும் வர்த்தகர்களும் உறுதியாக இருக்கும் போது இதற்கு மாற்றமான தீர்மானத்தை எடுத்து ஓமந்தைக்கு கொண்டு செல்வதில் இந்தச் சபை முனைப்புக் காட்டுகின்றது.
தாண்டிக்குளத்தில் இது அமைய வேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழ்க் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களான பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , டாக்டர் சிவமோகன் மற்றும் மாகாணசபை அமைச்சர்களான சட்டத்தரணி டெனீஸ்வரன், ஆர். சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினரான புளொட் முக்கியஸ்தர் லிங்கநாதன் ஆகியோரை எதுவுமே விமர்சிக்காது அவர்களை தவிர்த்துவிட்டு எனக்கு மட்டுமே கல்லெறிந்து வருகிறார் விக்கி ஐயா. யாழ்ப்பாணத்தில் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் றிஷாட் தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என கூறி அந்த மக்களிடம் என்னை ஓர் இனவாதியாக அவர் சித்தரித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம்? என நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பேசிய போது றிஷாட் மேலும் தெரிவித்தார்.