இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் விசேட கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகளின் குழு இன ரீதியான பாரபட்சங்களை கலைவதற்கான ஜெனீவாவில் விசேட கூட்டத் தொடரை நடத்தவுள்ளது.
இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் திகதி முதல் 26-ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் நிலவும் இனரீதியான பாகுபாடுகள் குறித்து இந்த கூட்டத் தொடரில் ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
18 பேர் கொண்ட சர்வதேச சுயாதீன நிபுணர்களின் இலங்கை தொடர்பான அறிக்கையும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பல்வேறு அறிக்கைகளும் முன்வைக்கப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்படவுள்ளன.
இலங்கை தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் மற்றும் 16-ம் திகதி இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.








