அரசுக்கு எதிரான இரண்டாம் நாள் பாதயாத்திரை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பு நோக்கிய இரண்டாவது நாள் பாதயாத்திரை மாவனொல்லை நகர எல்லையில் உள்ள உதுவன்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிரணியின் பாதயாத்திரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியின் புறநகர் பகுதியான கெட்டம்பேயிலிருந்து நேற்று ஆரம்பமாகியது.
கெடம்பேயில் ஆரம்பமாகிய முதல்நாள் பாதயாத்திரை கனேதென்ன – ஹிகுல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ள முடியாது பின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.