Breaking News

இன்று மோதல்கள் ஏற்படலாம், பொது மக்கள் அவதானம்- பொலிஸ் மா அதிபர்



பல்வேறு அரசியல் கட்சிகளினால் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது கலவரம் ஏற்படும் விதமான செயற்படும் சகலருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளார்.

கண்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ள நடைபவனி மற்றும் வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் என்பனவற்றினால் மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனால், பொது மக்கள் கூடிய அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.