இன்று முதல் பாடசாலை விடுமுறை.!
நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் இன்று முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆரம்பமாகின்றது என கல்வியமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
க.பொ.த.உயர்தர பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படவுள்ளன.
இதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி புதன்கிழமையும் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.