அரசாங்கத்திற்கு எதிராக பெப்ரல் அமைப்பு வழக்கு
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தாது, அரசாங்கம் அதனை தொடர்ச்சியாக பிற்போட்டு வருவதற்கு எதிராக, பெப்ரல் அமைப்பு வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
அரசாங்க தரப்பில் பல தரப்பினரும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து பல்வேறு வகையில் தகவல்களைத் தெரிவித்து தேர்தலை பிற்பபோட்டு வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் உள்ளுராட்சி சபைகள் அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையெனவும், இதனால், அடுத்து வரும் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.








