எதிர்கால திட்டம் என்ன? ஆராய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற்றவுள்ளதாக கூட்டமைப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த கலந்துரையாடல் சனிக்கிழமை காலை 10 மணியளவில், வவுனியாவில் நடைபெறவுள்ளதாக, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் தொடர்பாகவும், கட்சியின் எதிர்க்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.
இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








