Breaking News

வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை! -சம்பந்தன்

வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என நாம் கூற முடியாது. அவ்வாறு கூறுவது ஐ. நாவின் தீர்மானத்திற்கு முரணானது என்பதனை அறியதவன் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில் ,

வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என நான் கூறவில்லை. அவ்வாறு கூறவும் முடியாது ஏனெனில் அது ஐ. நாவின் தீர்மானத்திற்கு முரணான நிலைப்பாடாக கொள்ளப்படும்.

இவ்வாறு நான் கூறியதாக தெரிவிப்பின் அது தவறானது. எனது கருத்து திரிவுபட்டு கூறப்படுகின்றது.

வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தில் இலங்கையும் அனுசரனையாக செயல்பட்டு ஐ.நாவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை இடம்பெற்ற ஆக வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இதனை தீர்மானம் நிறைவேறிய நாள் முதலே நாம் கூறிவருகின்றோம்.

இருப்பினும் ஜனாதிபதி அண்மையில் இவ்விதமாக வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது என கருத்துக் கூறியுள்ளார். அக் கருத்தை கூறியதற்கு தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்பு நீதிமன்றங்களில் தலையீடு செய்வதில்லை. நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே வருகின்றன . பழைய ஜனாதிபதியினைப் போன்று தலையீடு இன்றி நீதித்துறை சுயாதீனமாகச் செயல்படும் என்ற அடிப்படையிலான ஓர் அபிப்பிராயம் உண்டு.

எனவே அரசின் சம்ம தத்துடன் நிறைவேறிய தீர்மானத்திற்கு முரணாக ஜனாதிபதி இவ்விதமாக கருத்தினை கூறினால் இங்குள்ள வேறுபாட்டின் காரனமாக சிக்கல் நிலை ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை.

கருமங்களை முன்னெடுக்க இந்த சிக்கலைத் தவிர்க்க ஜனாதிபதி மற்றும் உரிய தரப்புடன் பேசவேண்டும். மாறாக ஜனாதிபதியுன் மோதும் நிலை தேவையற்றது எனக் கூறியதே இவ்வாறான வடிவத்தில் செய்தியாக வெளிவந்துள்ளது.

தமிழ் மக்களிற்கு நிகழ்ந்த அவலத்திற்கு உண்மையை கண்டறிவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாடுபட்டு உருவாக்கிய ஐ.நாவின் தீர்மானத்திற்கு முரணாக என்றுமே கருத்துரைக்க முடியாது. என்றார்.