மகிந்தவை நீக்க ரணில் எதிர்ப்பு
மத்தல விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிராந்திய அரசியல்வாதிகளே சிறிலங்கா பிரதமரிடம், மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
ஆனால் அதற்கு மகிந்த ராஜபக்ச உடன்படவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம், அம்பாந்தோட்டை ருகுணு மாகம்புர ராஜபக்ச துறைமுகம் ஆகிய பெயர்களில் இருந்து. ராஜபக்சவின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே சிறிலங்கா பிரதமரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், இதற்கு ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.