Breaking News

இலங்கை அகதி இந்தியாவில் தற்கொலை!




இலங்கை தமிழ் பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தலைக்கு பூசும் சாயத்தினை குடித்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகம் தரமங்கலம் பவளத்தானூர் அகதி முகாமை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது 17 வயதான பவித்ரா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 14ஆம் திகதி தலைக்கு பூசும் சாயத்தினை குடித்த நிலையில் சேலம் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலன் இன்றி பவித்ரா நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தாரமங்கலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.