யாழ் பல்கலைக்கழகம் இன்று வழமைக்கு!
யாழ். பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ வணிக பீடத்தின் சில பிரிவுகளின் கல்விச் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று கலைபீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் அவர் கூறினார்.
அததுடன் இன்று முகாமைத்துவ வணிக பீடத்தின் முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுதவிர கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ வணிக பீடத்தின் ஏனைய கல்விச் செயற்பாடுகள் மற்றும் விஞ்ஞான பீடத்தை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறினார்.
பீடாதிபதிகளுடன் இது தொடர்பில் பேசி இன்றைய தினம் அறியத்தருவதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.








