அமைச்சர்களை சிறை வைத்த மைத்திரி
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஆறு பேரை ஜனாதிபதி இன்று சிறைவைத்தார்.
மாத்தறை மதுவரி அத்தியேட்சகர் அலுவலகத்திற்கு சொந்தமான சிறைக்கூடத்திலேயே இவர்களை ஜனாதிபதி சிறைவைத்திருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற புத்திக பத்திரணவையும் சிறையில் அடைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்த போதிலும் தனது சாதுரியத்தால் அவர் அதிலிருந்து நழுவியிருந்தார்.
மாத்தறை கலால் அதிகார சபைக்கான காரியாலயத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
இந்த நிகழ்விற்கு வருகைதந்திருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கிருந்த சிறைகூடத்திற்குள் ஜனாதிபதி அனுப்பிய சம்பவமே இந்த சிறைவைப்பு நாடகமாக அமைந்தது.








