பக்தாத் தாக்குதல், உயிரிழந்தவர்கள் 165 ஆக அதிகரிப்பு
ஈராக்கின் பக்தாத் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் 225 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்விவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நோன்புப் பெருநாளைக்கு பொருட்கள் வாங்கவந்தவர்களே இத்தாக்குதலில் அதிகம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சியாக்கள் அதிகம் உள்ள பிரதேசத்திலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பக்தாதிலுள்ள கர்ராதா மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இத்தாக்குதலுக்காக ஈராக்கில் மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.








