தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
யாழ்பாணத்திற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொண்டைமானாறு தடுப்ப ணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கடல் நீர் நகர்களுக்குள் உட்புகுவதையும், மழை காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையிலும் இந்த தடுப்பணை நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








