Breaking News

மஹிந்த, மைத்திரியுடன் இணைந்தால் அவருக்கும் அதே கதிதான்- கூட்டு எதிர்க் கட்சி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்டால், மஹிந்த ராஜபக்ஷவையும் நாம் கைகழுவி விட்டிடுவோம் என மொரட்டுவ முன்னாள் நகராதிபதி சமன்லால் பிரணாந்து தெரிவித்துள்ளார்.

இவர் கூட்டு எதிர்க் கட்சியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய அமைப்பாளராக செயற்படும் சமன்லால் பிரணாந்துவே இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்யும் அநியாயங்கள் காரணமாக மைத்திரி – மஹிந்த இணைவதற்கு தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொரட்டுவ நகர சபையின் 11 முன்னாள் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்றிலேயே சமன்லால் பிரணாந்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.