Breaking News

சம்பந்தனின் காய்நகர்த்தல் தோல்வி - பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்!

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய
நிலையத்தை அமைப்பதற்கு வவுனியா – ஓமந்தையில் உள்ள காணியை நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வை யிடவுள்ளனர்.

காணியை பார்வையிட்ட பின்னர் வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில்அமைப்பது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதில் இன்று வெள்ளிக் கிழமை காலை 10.15 மணிக்கு இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன்மற்றும், சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.




தொடர்புடைய முன்னைய செய்தி


ஓமந்தையா? தாண்டிக்குளமா? -முதல்வருக்கெதிரான சம்பந்தனின் காய்நகர்த்தல்