Breaking News

வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்குமாறு கோரிக்கை முன்வைப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லையென  யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வடமாகாணத்தில் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்ற வடக்கு மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த   செயலணியை முடக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை வேடிக்கையானது என தெரிவித்த அவர், வடக்கிலும், கிழக்கிலும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் 65௦௦௦ வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எத்தகைய தடைகளும் போடாத வடக்குமாகாண சபை, வடக்கு மீள்குடியேற்ற செயலணிக்கு மாத்திரம் தடைபோடுவது எந்த வகையில் நியாயம்? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.