வடமாகாணத்திற்கான முதலீட்டாளர் சம்மேளனம் அங்குரார்ப்பணம்
வடமாகாணத்தில் புதிய தொழில் துறைகளையும் தொழில்வாய்ப்புக்களையும் உருவாக்கும் நோக்கில் வடமாகாணத்திற்கான முதலீட்டாளர் சம்மேளனம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் டீ. எம்.சுவாமிநாதன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, இந்திய துணை தூதுவர் நட்ராஜ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.