இனி எண்டாலும் கொஞ்சம் யோசியுங்கோ...!!
சர்வதேச அழுத்க்தங்ஜளில இருந்து விடுதலை பெறுவதுதான் இந்த அரசாங்கத்தின்ர பிரதான நோக்கம் எண்டதை நல்ல வடிவா எங்கட சம்பந்தன் ஐயாண்ட நெல்சன் மண்டேலாவான மைத்திரி சொல்லியிருக்கிறார்.
இது ஒண்டும் புதுசில்ல அடிக்கடி அவர் இதை தெளிவா சொலுறவர் .
2017 மார்ச் ஐநா அமர்வோட இலங்கை விவகாரம் அமுங்கிபோகும் எண்டு முதலமைச்சரை சந்திச்ச , தென்னிலங்கை முக்கியபுள்ளி ஒருவர் சொன்னதாக விக்னேஸ்வரன் கிட்டடியில உறுதிப்படுத்தியிருந்தார்.
உத்தேச அரசியலமைப்பு மாற்றயோசனையோட எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எண்டது இப்ப எங்களுக்கு வடிவா விளங்குது. எங்கட ஐயாமருக்கும் இது முன்னமே தெரிஞ்சிருக்கும்.
அரசியலமைப்பும், ஒற்றையாட்சியை தாண்டி வரபோறதில்லை எண்டதில அவை வலு தெளிவா இருக்கினம். அதுவும் எங்கட ஐயாமாருக்கு தெரியும். ஆனால், அந்த தீர்வு திட்டத்தை எப்பிடி எங்கட சனத்தை பேய்க்காட்டி அமத்தாலாம் எண்டதும் எங்கட ஐயாமாருக்கு தெரியும்.
இருக்கவே இருக்குது “மகிந்த்த வந்துவிடுவார் கவனம்” எண்டுற சுலோகம். இது எல்லாம் இப்பிடித்தான் போகும் எண்டது எங்கட ஐயாமாருக்கு விளங்காத அளவுக்கு முட்டாள்கள் இல்லை எண்டதில எனக்கு எள்ளளவு சந்தேகம் இல்லை.
அனால், இதெல்லாம் சனத்துக்கு விளங்கப்போகுது எண்டு வரேக்க,
” சம்பந்தர் எச்சரிக்கை, சம்பந்தர் காட்டம்’ சம்பந்தர் பாய்ச்சல்’ , “சம்பந்தர் உறுமல் ”“சம்பந்தர் சீற்றம்” எண்டு உசுப்பேத்துற தலையங்கங்கள் போட்டு உணர்ச்சி அரசியல் செய்யுறதுக்கு அவைக்கு யாரும் சொல்லித்தரவேணுமே!!
இனி எண்டாலும் கொஞ்சம் யோசியுங்கோ
நன்றி – முகநூல் பதிவிலிருந்து Ulaka Maka Saanakkiyan