இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம் - THAMILKINGDOM இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம் - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்  சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

  ஐ.நா சுற்றுச்சூழல் முகவர் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அவர் ஐ .நாவில் நிகழ்த்திய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

  கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் மற்றும் விட்டுக்கொடுப்பு உள்ளிட்ட விடயங்களில், நான் பெறமதியான பாடங்களை சிறிலங்கா அமைதி முயற்சிகளின் போது கற்றுக் கொண்டேன்.

  எனது பார்வையில் இருந்து கூறுகிறேன், அரசியல் தலைவர்களும், கெரில்லா தலைவர்கள் அல்லது தீவிரவாத தலைவர்கள் விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லாதவர்களாகத் தோன்றினாலும், நீங்கள் எப்போதுமே, பேச்சு நடத்த முயற்சிக்க வேண்டும். பேசுவதற்கு முயற்சியுங்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top