Breaking News

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இலங்கையுடன் பேசுவார் பான் கீ மூன்

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது குறித்து சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுடன் ஐ.நா பொதுச்செயலர் பேச்சு நடத்தக் கூடும் என்று குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நீதி, அபிவிருத்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவர் பேச்சுக்களை நடத்துவார் என்றும் ஐ .நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறிலங்கா மக்களுக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இன்று பிற்பகல் சிறிலங்கா வரவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.