ஜெயலலிதாவை பாராட்டிய மகிந்த!
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீன் பிடிப்பதற்கான வசதிகளை செய்து தரக்கோரி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தது பாராட்டுக்குரியது என இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறியதாவது, தமிழக முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி , பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்துள்ளார்.
அதில் மீனவர்கள் பாக் ஜலசந்தியை தவிர்த்து, கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கான வசதிகளை செய்து தரக் கோரி ரூபாய் 975 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது பாராட்டத்தக்கது, மேலும் இந்த முடிவு சர்வேதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மீன்பிடி விதிமுறை. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழக மீனவர்கள் இரட்டை மடி வலை விவகாரத்தால்தான் கைது செய்யப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த ஜூன் 16 ஆம் திகதி இலங்கை கடற் படையினரால், தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








