Breaking News

சவுதியில் நிதி நெருக்கடி, 112 இலங்கையர்கள் தொழில் இழப்பு, தூதரகத்தில் தஞ்சம்



சவுதி அரசாங்கம் தற்பொழுது முகம்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடி நிலைமையினால், அந்நாட்டில் வேலை செய்யும் 112 இலங்கையர்கள் தற்பொழுது தமது தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தொழிலை இழந்த இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி உபுல் தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.