Breaking News

விட்டுக் கொடுக்காதீர்கள் - சிங்கள மாணவர்களிடம் ஹெல உறுமய கோரிக்கை



யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்க ளினதும் வடக்கு அரசியல்வாதிகளினதும் இனவாத த்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் அடிபணியாமல் தமது உரிமைக்காக போராட்டம் நடாத்துமாறு அப்பல்கலையின் சிங்கள மாணவர்களிடம் கேட்டுக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகவும் கட்சியாகவும் ஜாதிக ஹெல உறுமய குறித்த மாணவர்கள் பின்னால் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். பல்கலையிலுள்ள சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பொலிஸாரின் வாக்குறுதி மாத்திரம் போதியதன்று. மாறாக, ஜனாதிபதி, பிரதமர், உயர் கல்வி அமைச்சர், உபவேந்தர் உட்பட பீடாதிபதிகள் அனைவரினாலும் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். வடக்கிலுள்ள சிங்கள மக்களுக்கு எதிரான வாதங்கள் முறியடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.