கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செல்லும் வெளிநாட்டு பயணங்கள் தன்னிடம் இருக்கும் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற செல்லும் பயணங்களாக இருக்கலாம் என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி முறைகேடான முறையில் சம்பாதித்த பணமானது வெளிநாட்டு விஜயங்களின் போது தனது அமைப்புக்கு கிடைத்த நிதியுதவிகளாக காட்டும் முயற்சிகளும் இருப்பதாக புலனாய்வுப் பிரிவுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் தோல்விக்கு பின்னர் உகண்டா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ததுடன் தற்போது தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த நாடுகளில் ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் தொழில் மற்றும் வர்த்தக நிமித்தமாக சென்றுள்ள கணிசமான சிங்களவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








