வடக்கு முதலமைச்சர் பான்கி மூனைச் சந்திக்க விசேட ஏற்பாடு!
நாளை(புதன்கிழமை) கொழும்பை வந்தடையும் ஐநா செயலாளர் பான்கிமூனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02.09.2016) வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் இன்று காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார் என அறியவருகின்றது.
ஐநா செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்தபின்னர் பிற்பகல் 2.00மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.
ஐநா செயலருடனான சந்திப்பின்போது வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. என்பதனையும் இதில் த.தே.கூட்டமைப்பு தலைமை சில குழறுபடிகளை செய்வதையும் தமிழ்கிங்டொம் நேற்று சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையிலேயே, இன்று முதலமைச்சரைத் தொடர்பு கொண்ட ஐ.நா வதிவிடப்பிரதிநிதி பான் கீ மூனை அவரும், அவரது அமைச்சர்களும் சந்திப்பதற்கான ஏற்பாடு தனியாகச் செய்யப்பட்டிருப்பதாகவும், நிகழ்சி நிரலில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
நேற்றைய இது தொடர்புடைய செய்தி
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்