Breaking News

மைத்திரியின் கதிரைக்கு வலதிலும் இடதிலும் மஹிந்தவும் சந்திரிக்காவும்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருட நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரு பக்கத்திலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் வெலகெதர விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் போது இக்காட்சியைக் கண்டுகொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, கட்சியின் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கும் அடுத்தடுத்தே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் எனவும் சிரேஷ்ட உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்