Breaking News

உரிமையாளர்கள் இல்லாத காணிகள், பணம் என்பன அரசுடமை!



உரிமையாளர்கள் இல்லாத அல்லது உரிமை கோரப்படாத காணிகள் மற்றும் பணம் என்பனவற்றை அரசுடமையாக்கத் திட்டமிடப்ப ட்டுள்ளது.

உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக்காலமாக நடத்திய விசாரணைகளின் போது உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.

உரிமை கோரப்படாத சொத்துக்கள், காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்குவதற்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.